Asianet News TamilAsianet News Tamil

திருட்டில் ஈடுபட்ட தொலைக்காட்சி நடிகைகள் இருவர் அதிரடி கைது..!

தொலைக்காட்சி நடிகைகள் இருவர், நூதன முறையில் பணக்காரர்களிடம் திருட்டில் ஈடுபட்டு, கையும் களவுமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

television actress arrest for robbery case
Author
Chennai, First Published Jun 18, 2021, 8:12 PM IST

தொலைக்காட்சி நடிகைகள் இருவர், நூதன முறையில் பணக்காரர்களிடம் திருட்டில் ஈடுபட்டு, கையும் களவுமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காலம் என்பதால் சீரியலில் நடிப்பதன் மூலம் தங்காது வாழ்க்கையை ஓட்டி வந்த நடிகைகள், தற்போது வருமானத்திற்கு வழி இல்லாமலும், தங்களுடைய ஆடம்பர செலவுகளுக்கு பணம் இல்லாமலும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். எனவே தங்களுடைய செலவிற்கு போதிய பணம் இல்லாமல் இரண்டு இளம் நடிகைகள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

television actress arrest for robbery case

இந்த கொள்ளை வழக்கில் இரண்டு தொலைக்காட்சி நடிகைகளை மும்பை, ஆரே போலீசார் கைது செய்துள்ளனர். இந்த இரண்டு நடிகைகளும் இதற்கு முன்பு சவ்தான் இந்தியா, க்ரைம் பேட்ரோல் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளனர். சில வெப் சீரிஸ்களும் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த இரு நடிகைகளும் சமீபத்தில் மும்பையில் உள்ள ஆரே காலனியில் தங்கள் நண்பரால் நடத்தப்படும், விடுதிக்கு  பேயிங் கெஸ்ட்டாக சென்று,  அங்கு  தங்கியிருந்த ஒரு பெண்ணிடமிருந்து ரூ .3 லட்சத்துக்கு மேல் திருடி விட்டு தப்பி சென்றுள்ளனர். 

television actress arrest for robbery case

இது குறித்து அந்த பெண் ஆரே காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, பணம் திருடியதாக கூறப்படும் சூரபி சுரேந்திர லால் ஸ்ரீவஸ்தவா (25), மொசினா முக்தர் ஷேக் (19) ஆகியோர் இருவரும் எங்கெங்கு சென்றனர் என போலீசார் அந்த விடுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சியை சோதனை செய்தனர். அப்போது இந்த நைடிகைகள் இருவரும் பண மூட்டையுடன் தப்பி சென்ற வீடியோ சிக்கியதால்,  அவர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

television actress arrest for robbery case

ஆரம்பத்தில் இந்த திருட்டை ஒப்புக்கொள்ளாத நடிகைகள், சிசிடிவி ஆதாரத்தை பார்த்ததும் தங்கள் மீது தவறு உள்ளதை ஒப்பு கொண்டனர். மேலும் தற்போது இவர்கள் திருடிய தொகையில் இருந்து ரூ.50 ஆயிரம் கைப்பற்றப்பட்டதாகவும், பின்னர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த பட்ட இவர்களை, 23 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios