பழம் பெரும் தெலுங்கு நடிகர் மாருதி ராவ், வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலன்றி இறந்தார்.

1986-ல் தெலுங்கில் வெளியான சுவாதி முத்தியம் உள்பட தெலுங்கு பட உலகில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராவும், வில்லன் நடிகராகவும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமின்றி, திரை கதை வசனகர்த்தாவும் பன்முகத்தன்மை கொண்டிருந்தார்.

தேசிய விருதுகள் மற்றும் ஆந்திர அரசின் உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.மாருதிராவ் மறைவுக்கு தெலுங்கு பட உலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.