மலையாளத்தில் மலர் டீச்சராக அறிமுகமாகி உள்ளங்களை கொள்ளை கொண்ட சாய் பல்லவியின் நிலை தமிழில் தள்ளாட்டம் போட்டு வருகிறது. 


எத்தனையோ பெரும் இயக்குநர்கள் தமிழுக்கு அழைத்தும், வராது மறுத்த சாய்பல்லவி, வராது வந்த மாமணியாய் இப்போது தான் தமிழில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் வந்த வேகத்திலேயே கோலிவுட் இப்படிக் கவுத்தும் என நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். ஆனால், இன்னும் கேரளாவில் அவருக்கு இருக்கிற அந்தஸ்து அப்படியே இருக்கிறது. ஆனால் தமிழில் அவர் நடித்த இரண்டு படங்களும் பிளாப். முக்கியமாக தனுஷுடன் நடித்த மாரி-2. இந்த பேரதிர்ச்சியில் இருந்து மீளாத சாய் பல்லவி, இனி தமிழ் படங்களே வேண்டாம் என்கிற அளவுக்கு நொந்து போயிருக்கிறாராம்.

இத்தனைக்கும் தமிழ்ப்பெண் சாய்பல்லவி. கொஞ்ச காலம் தமிழ் படங்களுக்கு ரெஸ்ட் என்று அறிவிக்காத குறையாக ஒதுங்கியிருக்கும் கீர்த்தி சுரேஷும், இந்த மலர் டீச்சரும் ஒன்றாக உட்கார்ந்து காரணத்தை ஆராயலாமே..?