பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் ஒரு வாரத்தை எட்டியுள்ளது. ஆனால் இன்னும் சிலர் தங்களுடைய உண்மையான முகத்தை காட்டாமல் விளையாடி வருவதாகவே மக்கள் மட்டும் அல்ல, இவர்களுடன் விளையாடி வரும் சக போட்டியாளர்களும் கருதுகிறார்கள்.

அந்த சம்பவத்தை தான் இன்று வெளி கொண்டு வந்துள்ளார்  தொகுப்பாளர் உலகநாயகன் கமல்ஹாசன். மேலும் இன்று தன்னுடைய முதல் படத்திலேயே கமலுக்கு ஜோடியாக நடித்த, ரேகா தான் வெளியே வர அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. முன்னதாக நேற்று ஷிவானி, ஆஜித் மற்றும் ரம்யா ஆகியோர் எவிக்சன் பட்டியலில் இருந்து நேற்று காப்பாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில்,  கமல்ஹாசன் முன் நடக்கும் டாஸ்க் ஒன்றில் ‘யார் மாஸ்க் போட்டிருக்கின்றார்கள்? யார் அகத்தின் அழகு முகத்தில் தெரியும்படி நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்? என்ற கேள்வியை கேட்டார். அதற்கு போட்டியாளர்கள் மாஸ்க் போட்டு இருக்கும் நபர்களையும் இயல்பாக இருக்கும் நபர்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் பெரும்பாலானோர் மாஸ்க் போட்டு இருப்பதாக ரியோவையும், ஆரியையும்  கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரியோ மாஸ்க் போட்டு தனது ஒரிஜினல் முகத்தை மறைப்பதாக பெரும்பாலான போட்டியாளர்கள் கூறியுள்ளனர். 

முகமூடி போட்டு இருப்பதாக உங்களை பெரும்பாலோர் தேர்வு செய்தது நியாயம் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா என்று கமலஹாசன் ரியோவிடம் கேட்டபோது ’எனக்கு கொடுத்தது நியாயமில்லை என்று தோன்றுகிறது’ என்று ரியோ பொங்கி எழுந்துள்ளதை அடுத்து காரசாரமாக விவாதம் வரும் வாரங்களில் நடைபெறும் என தெரிகிறது.