Tanzikas short film of 8 accolades

கபாலி படத்தின் மூலம் பிரபலமான தன்ஷிகா நடித்த சினம் என்ற குறும்படம் கொல்கத்தா திரைப்பட விழாவில் 8 விருதுகளை வாரி குவித்துள்ளது. 

கபாலி படத்தில் ரஜினியின் மகளாக நடித்த நடிகை தன்ஷிகா குறும்படம் ஒன்றில் விலை மாதுவாக நடித்துள்ளார்.

ஜெயம் ரவியுடன் பேராண்மை என்ற படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தன்ஷிகா. 

இதையடுத்து மாஞ்சா வேலு, அரவான் போன்ற படங்களில் நடித்து பின் கபாலி படம் மூலம் நற்பெயரையும், நிறைய ரசிகர்களையும் கவர்ந்தார். 

இந்நிலையில், ஆனந்த மூர்த்தி இயக்கதியுள்ள சினம் குறும்படம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து மேற்குவங்கத்துக்கு பிழைக்க சென்று அங்கு பாலியல் தொழிலாளியாக மாறிய ஒரு பெண்ணின் கதை. 

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து நேஷன் கிரியேஷன் சார்பில் நேசன் திருநேசன் தயாரித்துள்ளார்.

இதில் பாலியல் தொழிலாளியாக தன்ஷிகா நடித்துள்ளார். இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் கலாச்சார திரைப்பட விழாவில் 100-க்கும் மேற்பட்ட படங்கள் இடம்பெற்றன. 

இதில் சினம் குறும்படம் 8 விருதுகளை பெற்று அசத்தியுள்ளது. அதாவது சிறந்த நடிகையாக தன்ஷிகா மற்றும் துணை நடிகையாக நடித்த பத்திதா, உள்ளிட்ட 8 விருதுகளை பெற்றுள்ளது.