Asianet News TamilAsianet News Tamil

சினிமா தொழிலாளர்கள் வயிற்றில் பால் வார்த்த தமிழக அரசு..! வெளியான அதிரடி அறிவிப்பு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில், முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், இதனால் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் மீண்டும் முடக்குவதற்கு வாய்ப்புள்ளதாக சில நம்பகத்தன்மை இல்லாதா தகவல்கள் உலா வந்த நிலையில், தற்போது தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை பிறப்பித்து, சினிமா படப்பிடிப்புகளுக்கும் அனுமதி அளித்து திரையுலகினர் வயிற்றில் பால் வார்த்துள்ளது.
 
tamilnadu government give the permission for cinema shooting
Author
Chennai, First Published Apr 29, 2021, 2:41 PM IST

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில், முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், இதனால் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் மீண்டும் முடக்குவதற்கு வாய்ப்புள்ளதாக சில நம்பகத்தன்மை இல்லாதா தகவல்கள் உலா வந்த நிலையில், தற்போது தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை பிறப்பித்து, சினிமா படப்பிடிப்புகளுக்கும் அனுமதி அளித்து திரையுலகினர் வயிற்றில் பால் வார்த்துள்ளது.

tamilnadu government give the permission for cinema shooting

கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதத்திற்கு மேல், படப்பிடிப்பு பணிகள் ஒட்டு மொத்தமாக நிறுத்தப்பட்டது. இதனால் திரையுலகை நம்பி, கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்த பலர் குடும்பத்தை நடத்த போதிய பணம் இல்லாமல் பசி, பட்டினியோடு வாடும் நிலை உருவானது. வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்பட்ட பல தொழிலாளர்களுக்கு நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோர் தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர்.

tamilnadu government give the permission for cinema shooting

இந்நிலையில், கொரோனாவின் இரண்டாவது அலையால் பலர் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பொதுமக்களை கொரோனா தாக்கத்தில் இருந்து பாதுகாக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மற்றொரு புறம், தடுப்பூசி போடும் பணியும் முழுமூச்சுடன் நடந்து வருகிறது. மே 1 ஆம் தேதி முதல், 18 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.

tamilnadu government give the permission for cinema shooting

இந்நிலையில் தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், அதே போல் ஏற்கனவே அறிவித்தது போல் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. திரையுலகில் வேலைசெய்யும் பணியாளர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சினிமா படப்பிடிப்புகள் உரிய கொரோனா பாதுகாப்புகளுடன் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios