பல புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் முன்போ அல்லது வெளியான சில மணி நேரங்களிலோ, அந்த திரைப்படம் திருட்டுத்தனமாக வெளியாகும் இடம் தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் என்பது அனைவரும் அறிந்ததே

சினிமா தயாரிப்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இந்த இணையதளம் தற்போது காவல்துறையினர்களால் கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து பல்வேறு ஐபி முகவரிகளால் இயங்கி வந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதள அலுவலகத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் இந்த அலுவலகத்தில் இருந்த சதீஷ், புவனேஷ் மற்றும் ஸ்ரீனி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசாரிடம் இருந்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவரவில்லை. எனினும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது என்பது உண்மை