producer raise question against those who blamed the famous actor

பொதுவாகவே சமுதாயப்பிரச்சனைகள் சார்ந்த போராட்டங்கள், என வரும் போது, திரைத்துறையை சேர்ந்தவர்களும் அதில் பங்கேற்க வேண்டும் என நினைப்பது போராட்டக்காரர்களுக்கு வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் காவிரி பிரச்சனைக்காக போராட்டங்கள் நடைபெற்றபோது ,அதில் அஜீத் ஏன் கலந்துகொள்ளவில்லை என போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பியதுடன் ,அவரை கடுமையாக விமர்சிக்கவும் செய்திருந்தனர்.

அஜீத் மிகப்பெரிய அளவிலான ரசிகர்களை கொண்ட ஒரு மாஸ் ஹீரோவாக இருந்தாலும் மிகவும் அமைதியான நபர் பொதுவாக தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர்.

அவர் மீது வைக்கப்பட்ட இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், அவர் மீது அபிமானம் கொண்ட தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே கோபி பேசுகையில், அஜீத் போன்ற நல்ல மனிதரை திரைத்துறையில் நான் பார்த்ததில்லை. அவரது நற்குணங்களை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். அஜீத்தை ஏன் இந்த பிரச்சனையில் இழுக்கிறீர்கள்? நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அந்த எம்.எல்.ஏக்களின் வீட்டுக்கு சென்று உங்கள் விமர்சனங்களை முன்வையுங்கள் என காட்டமாக பதிலளித்திருக்கிறார்.