Asianet News TamilAsianet News Tamil

தமிழ் ராக்கர்ஸ்ல ‘வட சென்னை’ வந்தாச்சி... இன்னும் சில நிமிடங்களில் ‘சண்டக்கோழி2’வா? விஷாலை வச்சு செய்றாய்ங்க...

தமிழ்ராக்கர்ஸுக்கு எதிராக ‘உங்களை உண்டு இல்லைன்னு பண்ணாம அடுத்த வேளை சோறு உண்ண மாட்டேன்’ என்கிற ஒரு பஞ்ச் டயலாக்கைத் தவிர மீதி எல்லாவற்றையும் பேசி முடித்துவிட்டார் விஷால்.

Tamil Movie Vada Chennai' Gets Leaked... Tamil Rockers
Author
Chennai, First Published Oct 18, 2018, 12:04 PM IST

தமிழ்ராக்கர்ஸுக்கு எதிராக ‘உங்களை உண்டு இல்லைன்னு பண்ணாம அடுத்த வேளை சோறு உண்ண மாட்டேன்’ என்கிற ஒரு பஞ்ச் டயலாக்கைத் தவிர மீதி எல்லாவற்றையும் பேசி முடித்துவிட்டார் விஷால். Tamil Movie Vada Chennai' Gets Leaked... Tamil Rockers

ரிசல்ட்...?  இன்று காலை வரை மிகப்பெரிய பூஜ்யம்தான்.  இதோ 65 கோடி பட்ஜெட்டில் மூன்று ஆண்டுகால கடின உழைப்பில் தமிழ் சினிமாவின் பெருமையை உயர்த்தும் ‘வட சென்னை’ படத்தை நேற்றே திருட்டுத்தனமாக வெளியிட்டுவிட்டது தமிழ்ராக்கர்ஸ். படங்களை திருட்டுத்தனமாக பிரிண்ட் எடுக்க உதவும் தியேட்டர்களை கட்டம் கட்டியும் விஷால் கோஷ்டியின் பாச்சா பலிக்கவில்லை. Tamil Movie Vada Chennai' Gets Leaked... Tamil Rockers

தமிழ்ராக்கர்ஸ் பயல்களுக்கு, மற்றவர்களை விட,  வாய்ச்சவடால் மன்னன் விஷால் மீது சற்றே பாசம் அதிகம் என்பதால் அவரது ‘சண்டக்கோழி2’ இன்னும் சில நிமிடங்களில் அதே இணையதளத்தில் வெளியாகும் என்பதை 100 சதவிகிதம் நம்பலாம். அடுத்து மாலை பத்திரிகையாளர்களை சந்தித்து கழுத்து நரம்புகள் தெறிக்க சவால் விட்டுவிட்டு அடுத்த படப்பிடிப்புக்கு கிளம்பிவிடுவார் விஷால்.

Follow Us:
Download App:
  • android
  • ios