"மேக்கிங்கே மிரட்டலா இருக்கே".. டிமான்டி காலனி 2 படப்பிடிப்பு முடிந்தது - வெளியான திரில்லிங் வீடியோ!
கடந்த 2018ம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான "இமைக்கா நொடிகள்" திரைப்படம் இயக்குனர் ஞானமுத்துவிற்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தது.

துவக்க காலத்தில் பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குனராக இருந்து அதன் பிறகு கடந்த 2015ம் ஆண்டு வெளியான அருள்நிதியின் டிமான்டி காலனி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் அறிமுகமானவர்தான் அஜய் ஞானமுத்து.
இதுவரை மூன்று திரைப்படங்கள் மட்டுமே இயக்கி வெளியிட்டு இருக்கிறார் என்றபொழுதிலும் அவை அனைத்துமே தனித்துவம் வாய்ந்த திரைப்படங்கள் என்றே கூறலாம். குறிப்பாக 2018ம் ஆண்டு பாலிவுட் இயக்குனர் அனுராக் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான "இமைக்கா நொடிகள்" திரைப்படம் இவருக்கு மாபெரும் பெயரை பெற்றுத்தந்தது.
இதையும் படியுங்கள் : பிக்பாஸ் ப்ரோமோ ஷூட்டிங்கை முடித்த கமல்! ஆனால் ஒரு சிக்கல்? இதுக்கும் கமல் தான் காரணமா?
அதன்பிறகு சியான் விக்ரம் நடிப்பில் வெளியான "கோபரா" திரைப்படத்தை இயக்கியதும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது சுமார் 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் அருள்நிதி இயக்கத்தில் டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் வெளியிட உள்ளார். தற்பொழுது அந்த படத்திற்கான படபிடிப்பு பணிகள் நடந்து முடிந்துள்ளது.
இந்த திரைப்படத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர் மற்றும் மூத்த தமிழ் நடிகர் அருண்பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்பொழுது ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், திரில்லிங் நிறைந்த இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு அசத்தியுள்ளனர் டிமான்டி காலனி 2 பட குழுவினர்.
இதையும் படியுங்கள் : வைரலாகும் விக்ரமின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.. எந்த படத்திற்கு என்று குழம்பும் ரசிகர்கள்!
டி பிளாக், தேஜாவு, டைரி என்று தொடர்ச்சியாக பல திரில்லர் படங்களில் நடித்து வந்த அருள்நிதிக்கு அதில் இருந்து ஒரு பிரேக் கொடுக்கும் வகையில் அமைந்தது கழுவேத்திமூர்க்கன் திரைப்படம். அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தனது அடுத்த படமான டிமான்டி காலனி 2 படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார் அருள்நிதி.