Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடியாருக்கு கோடான கோடி நன்றி... காலம் அறிந்து உதவியதை எண்ணி உருகும் தயாரிப்பாளர்கள் சங்கம்...!

தக்க சமயத்தில் அரசாணை வெளியிட்டு தங்களை காத்ததற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

Tamil Film Producers council Say thanks to CM Edappadi palaniswami
Author
Chennai, First Published Jan 4, 2021, 3:23 PM IST

கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் 50 சதவீத பார்வையாளர்களுடன் கடந்த 15ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் பார்வையாளர்கள் குறைப்பு காரணமாக முன்னணி ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. குறிப்பாக சூர்யாவின் சூரரைப்போற்று, விஜய்சேதுபதியின் க/பெ ரணசிங்கம் உள்ளிட்ட சில படங்கள் ஓடிடியில் வெளியானது தியேட்டர் உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

Tamil Film Producers council Say thanks to CM Edappadi palaniswami

 

இதையும் படிங்க: சித்ராவின் ஹேண்ட் பேக்கில் கிடைத்த கஞ்சா... திசைமாறும் தற்கொலை வழக்கு... போலீசாரிடம் சிக்கிய பகீர் ஆதாரம்!

இதனால் தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் இடையே மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. கடந்த சில மாதங்களாகவே 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கும் படி தியேட்டர் உரிமையாளர்கள் தமிழக அரசை வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக சமீபத்தில் நடிகர் விஜய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார். அதேபோல் இன்று காலை நடிகர் சிம்புவும் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கோரி முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார். 

Tamil Film Producers council Say thanks to CM Edappadi palaniswami

இந்நிலையில் இன்று தமிழக அரசு திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து ஆணை பிறப்பித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் திரையரங்க உரிமையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தக்க சமயத்தில் அரசாணை வெளியிட்டு தங்களை காத்ததற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

Tamil Film Producers council Say thanks to CM Edappadi palaniswami

 

இதையும் படிங்க: ‘இனி அஜித், விஜய் எல்லாம் காலி’... சிம்பு களத்தில் இறங்கி கலக்கப்போறார்... புகழ்ந்து தள்ளிய சுசீந்திரன்...!

அதில், தமிழ் திரையுலகிற்கு எண்ணற்ற சலுகைள் வழங்கி வரும் மாண்புமிகு. முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மாண்புமிகு.திரு.கடம்பூர்ராஜு அவர்களும், திரையரங்குளில் 50 சதவிகிதம் பார்வையாளர்கள் மட்டும் படம் பார்த்து வந்த நிலையில் தற்போது 100 சதவிகித பார்வையாளர்கள் படம் பார்ப்பதற்கு அனுமதி அளித்து ஆணை பிறப்பித்துள்ளார்கள். இன்று நிலவிவரும் தமிழ் திரையுலகின் அசாதாரண சூழ்நிலையிலிருந்து, தொழில் பாதுகாப்பு அளித்து தக்க தருணத்தில் இந்த அனுமதி அளித்ததற்கு மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்களுக்கும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும், தமிழ்த் திரையுலகம் சார்பிலும் எங்கள் கோடானு கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனக்குறிப்பிட்டுள்ளனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios