தமிழ் சினிமாவில் ‘இறுதிச்சுற்று’ திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள திரைப்படம் “சூரரைப் போற்று”. இந்தியாவில் முதன் முறையாக பட்ஜெட் பிளைட்டை உருவாக்கி ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட், சிக்யா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்த திரைப்படம் கொரோனா பிரச்சனை மட்டும் இல்லை என்ற கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது. அதனால் வரும் அக்டோபர் மாதம் 30ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. தியேட்டரில் மாஸாக கொண்டாடி தீர்க்க காத்திருந்த சூர்யா ரசிகர்கள் இதனால் கடும் அதிருப்தி ஆகினர். சூர்யாவின் முடிவுக்கு எதிராக #WeWantSooraraiPottruInTheatre  என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது. 

 

இதையும் படிங்க: இன்று சிவகார்த்திகேயன் வீட்டில் விசேஷமான நாளாம்... நீங்கள் பார்த்திடாத புகைப்படங்களுடன் அசத்தல் தகவல்கள் !

தற்போது தயாரிப்பாளராக சூர்யா எடுத்த அதிரடி முடிவின் பலனை நினைத்து ஒட்டுமொத்த திரையுலகமே மிரண்டு போயுள்ளது. ஆம் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட சூரரைப் போற்று திரைப்படம்,  ரிலீஸுக்கு முன்னதாகவே ரூ. 100 கோடிக்கு பிசினஸ் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தயாரிப்பு தொகையான ரூ.60 கோடியை கொடுத்து அமேசான் பிரைம் ஏற்கனவே படத்தை வாங்கிக் கொண்டதாக கூறப்படும் நிலையில், சாட்டிலைட் உரிமை ரூ.20 கோடி, ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் ரூ.20 கோடி என மொத்தம் 100 கோடி ரூபாயை அள்ளியுள்ளதாக கூறப்படுகிறது. 

 

இதையும் படிங்க: அனிகாவின் ஓணம் ஸ்பெஷல் ட்ரீட்... யாருமே எதிர்பார்க்காத லுக்கில் அதிரடி காட்டும் போட்டோஸ்...!

அதுமட்டுமில்லாமல் சூரரைப் போற்று திரைப்படம் 200 நாடுகளில் வெளியாக உள்ளதாகவும் அப்படத்தின் இணை தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் ரசிகர்களை செம்ம குஷியாக்கியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் #SooraraiPottruHits100crPB என்ற ஹேஷ்டேக்கை தேசிய அளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர். சூர்யாவின் ஓடிடி ரிலீஸ் முடிவுக்கு எதிர்ப்பு வலுத்து வந்த நிலையில், இந்த பிசினஸ் மேட்டர் அனைத்தையும் மறக்கடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.