Tamil film in landon

நடிகர் ராகவ் ரங்கநாதன், ‘எந்திரன்’, ’நஞ்சுபுரம்’ என பல படங்களில் நடித்திருக்கிறார்.

‘ஜோடி நம்பர் 1’, ’மானாட மயிலாட’ போன்ற ரியாலிடி ஷோக்களிலும் பங்கேற்றவர்.

இவர் ‘டிக்கெட்’ என ஒரு படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்துள்ளார் என்பது லேட்டஸ்ட் அப்டேட்!

லக்ஷ்மி பிரியா, சனம் ஷெட்டி, ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் ‘லண்டன் இந்தியன் பிலிம் பெஸ்டிவல் (LIFF) 2017’ சார்பில் பிரத்யேகமாக திரையிடப்படவுள்ளது. தவிர, லண்டனிலும்பெர்மிங்காமிலும் இப்படம் திரையிடுகிறார்கள்.

இதன் மூலம் இங்கிலாந்தில் மூன்று இடங்களில்பிரத்யேகமாக திரையிடப்படும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை டிக்கெட் படம் பெற்றுள்ளது!