Tamil film got postponed
இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் திரிஷா நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் சாமி. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சாமி ஸ்கொயர் எனும் தலைப்பில் தற்போது தயாராகி வருகிறது. வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்யும் எண்ணத்தில் வெகு வேகமாக தயாராகி வருகிறது சாமி-2
இந்த திரைப்படத்தில் விக்ரமின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகிய இத்திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் மோஷன் போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து மே 26 அன்று சாமி2-ன் டிரைலரை வெளியிட இப்படக்குழு முடிவு செய்திருந்தது
ஆனால் சமீபத்தில் நடந்த தூத்துக்குடி சம்பவம், அனைத்து தமிழக மக்கள் மனதிலும் மிகுந்த துயரத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக சாமி-2 டிரைலர் வெளியிடுவதை தள்ளி வைத்திருக்கின்றது சாமி-2 படக்குழு.
இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கும் தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் பின்வருமாரு தெரிவித்திருக்கிறார் “ இது கொண்டாடுவதற்கான நேரம் அல்ல, இதனால் உங்கள் அனைவரின் அனுமதியுடன் சாமி2 டிரைலர் டிலீசை தள்ளி வைக்கிறேன், என்பதை தெரிவித்து கொள்கிறேன். தூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்த மக்களுக்காக நாம் பிரார்த்தனை செய்து கொள்வோம். இது போன்ற பிரார்த்தனைகளை செய்ய வேண்டிய நிலை, இனி எப்போதும் நமக்கு ஏற்படக்கூடாது.” என கூறியிருக்கிறார்.
