கொரோனா தொற்றால் அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. பாலிவுட்டில் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆரத்யாவுக்கும், பிரபல தயாரிப்பாளரான போனிகபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர், அவரது காதலி மலைக்கா அரோரா, அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, விஷால், நிக்கி கல்ராணி, பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் பூரண குணமடைந்து மீண்டும் வரும் நிலையில், சிலர் இறந்துவிடுவது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. 


நடிகர் விஜய்யின் புதிய கீதை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவனர் நடிகர் ப்ளோரண்ட் பெரைரா. இதையடுத்து அவர்  என்கிட்ட மோதாதே, வேலையில்லா பட்டதாரி 2, கும்கி, கயல், தொடரி, தர்மதுரை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக ஊடகத்துறையிலும் பணியாற்றியுள்ளார். கலைஞர் தொலைக்காட்சியில் பொதுமேலாளராக பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

இதையும் படிக்க: “இது சூர்யா, ஜோதிகா, சிவக்குமாரின் கூட்டுச்சதி”... மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் பரபரப்பு புகார்!

கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார்.  ப்ளோரண்ட் பெரைரா மரணத்திற்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.