நடிகர் ரவி மோகனும் அவரது கேர்ள் பிரண்ட் கெனிஷாவும் ஜோடியாக பார்ட்டி வைத்துள்ளனர். அதில் திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Kenisha - Ravi Mohan Party : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் பாடகி கெனிஷா உடன் நெருங்கி பழகி வருகிறார். இருவரும் கடந்த மாதம் நடைபெற்ற ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் ஜோடியாக கலந்துகொண்டனர். அந்த நிகழ்வு மூலம் தங்கள் காதலை சூசகமாக அறிவித்துவிட்டனர். பின்னர் கெனிஷா பற்றி பேட்டி ஒன்றில் பேசுகையில், அவர் தனக்கு கிடைத்த சிறந்த வாழ்க்கை துணை என ரவி மோகன் கூறி இருந்தார்.

கெனிஷாவும் ரவி மோகனும் தற்போது லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வருகிறார்களாம். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ரவி மோகன் - ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தற்போது கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. தனக்கு மாதம் 40 லட்சம், ஜீவனாம்சம் கோரி இருந்தார் ஆர்த்தி. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருவதால் கெனிஷா உடனான தன்னுடைய காதலை வெளியில் அறிவிக்காமல் சீக்ரெட்டாகவே வைத்திருக்கிறார் ரவி மோகன்.

View post on Instagram

ரவி மோகன் - கெனிஷா வைத்த பார்ட்டி

இதனிடையே பாடகி கெனிஷா, அண்மையில் தன்னுடைய சுயாதீன இசை ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்டார். அந்த பாடலை பாடியது மட்டுமின்றி அதற்கு இசை அமைத்ததும் கெனிஷா தான். அதில் நடனமும் ஆடி இருந்தார். அந்த பாடலில் ஹைலைட்டாக ரவி மோகன் இறுதியில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்திருந்தார். அந்த பாடலுக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அன்றும் இன்றும் என்கிற அந்த ஆல்பம் பாடல் ஹிட்டானதால் ரவி மோகன் - கெனிஷா இருவருமே செம சந்தோஷத்தில் உள்ளனர்.

இந்த சந்தோஷத்தை திரைப்பிரபலங்களோடு சேர்ந்து கொண்டாடும் விதமாக கெனிஷாவும், ரவி மோகனும் சேர்ந்து பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அந்த பார்ட்டியில் இயக்குனர் சுதா கொங்கரா, நடிகர் மாதவன், இசையமைப்பாளர் தரண்குமார், பாடகர் அறிவு, இசையமைப்பாளர் டி இமான் உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த பார்ட்டியில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார் கெனிஷா.