நந்தா படத்தில் லொடுக்கு பாண்டியாக அறிமுகம் ஆகி, பின் பாடகர், கதாநாயகன் என தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் கருணாஸ்.

இவர் அதிமுக சார்பில், தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டசபை சென்றவர், அதே நேரத்தில் தன்னுடைய திரைபயணத்தையும் தொடர்ந்து வருகிறார்.

சமீப காலமாக அரசியலில் நிலவி வந்த குழப்பங்கள் அரசியல் தலைவர்களை மட்டும் அல்ல பொதுமக்களையும் பாதித்தது, இந்நிலையில் கருணாஸின் தொகுதி மக்கள் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த நிலையில் இவர் மக்கள் விரும்பாத கட்சிக்கு ஆதரவு தந்ததால் இவர் மீது அவர் மிகவும் கோபத்தில் உள்ளார்களாம்.

நேற்று கருணாஸின் பிறந்தநாளுக்கு இவருடைய தொகுதி மக்கள் மற்றும் சொந்தக்காரர்கள் யாரும் வாழ்த்து தெரிவிக்கவில்லையாம்.

பலர் அவருக்கு போன் செய்து திட்ட தான் செய்துள்ளார்கள், இவை கருணாஸை மிகவும் காயப்படுத்தியதாக கிசுகிசுக்கப்படுகின்றது. இதுபோன்ற ஒரு பிறந்த நாளை கொண்டாடியது இல்லை என வேதனையில் உள்ளாராம் கருணாஸ்.