Tamil actor in his new look for his upcoming movie

தல அஜீத் விவேகம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் சிறுத்தை சிவா கூட்டணியில் நடித்துவரும் திரைப்படம் விஸ்வாசம். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு, ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் வைத்து தொடங்கி , விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இந்த திரைப்படத்தின் தொடக்க விழாவின் போது அஜீத், இயக்குனர் சிவா மற்றும் இமான் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் வெளியாகியிருந்தது. அதில் அஜீத் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்தார். இதை தொடர்ந்து இந்த படத்திலும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கா? என கேள்வி எழுப்பியிருந்தனர் அஜீத் ரசிகர்கள்.

அதற்கு இந்த படத்தில் அஜீத் ஒரு புது கெட்டப்பில் வருவார். என்று விஸ்வாசம் படக்குழு தரப்பில் பதிலளிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த படத்தில் அஜீத் கருப்பு முடியுடன் ஒரு கெட்டப்பிலும், சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் ஒரு கெட்டப்பிலும் நடிக்கிறார். என தகவல் வெளியாகியிருக்கிறது.

அதற்கு ஏற்றார் போல படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களில், சால்ட் அண்ட் பெப்பர் லுக் அஜீத் புகைப்படங்கள் இப்போது வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது. புது கெட்டப் விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது . புது கெட்டப்பில் அஜீத்தை காண தல ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர்.