இது டாப்ஸிக்கு தெரியாம போச்சே..? மேடையில் தமன்னா செய்த செயல்... வைரலாகும் வீடியோ!
டாப்ஸி மற்றும் தமன்னா கலந்து கொண்ட நிகழ்ச்சியில், தமன்னாவின் செயல் அனைவரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது.
தமிழ், தெலுங்கு திரையுகில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை தமன்னா - டாப்ஸி இருவருமே சமீப காலமாக பாலிவுட் திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் கதாபாத்திரத்தை விட, கதாநாயகிகளுக்கு, முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையும், வெப் சீரீஸ்களையும் தேர்வு செய்து நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அதே போல், படவிழாக்களிலும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வரும் இவர்கள்... அண்மையில், மெல்பர்னில் நடந்த இந்திய திரைப்பட விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்து, குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர். அப்போது, தமன்னா... தன்னுடைய காலில் அணிந்திருந்த ஹீல்ஸை அவிழ்த்து விட்டு விட்டு குத்து விளக்கு ஏற்றியுள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாக, தமன்னாவின் இந்த செயலை பலரும் மனதார பாராட்டி வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: தளபதி வீட்டில் பறக்கும் தேசிய கொடி..! வைரலாகும் புகைப்படம்..!
மேலும் செய்திகள்: இது எங்க போய் முடிய போகுதோ..? கேரவனுக்குள் மணக்கோலத்தில் கொஞ்சி குலாவும் அமீர் - பாவனி! பொங்கும் நெட்டிசன்கள்
தமன்னாவுக்கு தெரிந்த இந்த மரியாதை டாப்ஸிக்கு தெரியவில்லையே என சிலர் சமூக வலைத்தளத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது தமன்னா - டாப்ஸி இருவருமே, ஹிந்தி திரையுலகில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். தமன்னாவின் கைவசம் ஒரு தமிழ் படங்கள் கூட இல்லை என்றாலும், டாப்ஸி ஜன கன மண மற்றும் ஏலியன் ஆகிய இரு தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமன்னா - டாப்சீ கலந்து கொண்ட, மெல்பர்ன் இந்திய திரைப்பட விழா வீடியோ இதோ..