Take money and get ready to get a certificate - Mansoor Aligan smashed sensor board...

மன்சூர் அலிகான் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவதால் இளைஞர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுள்ளார்.

சமீபத்தில் இவர் இசை வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்றார்.

அதில் பேசிய மன்சூல் அலிகான், “சென்ஸாரில் ஒரு படத்தின் யு சான்றிதழுக்காக பலரும் பல இலட்சம் செலவு செய்கிறார்கள். இதை அவர்கள் விரும்பி தருவதில்லை, ஒரு சிலர் பதவியை தவறாக பயன்படுத்தி கொள்ளை அடிக்கிறார்கள்.

“அதாகப்பட்டது மகாஜனங்களே” படத்திற்கு ரூ.4 இலட்சம், “வனமகன்” படத்திற்கு ரூ.15 இலட்சம், “காற்று வெளியிடை” படத்திற்கு ரூ.1 கோடிக்கு பேசி கடைசியாக ரூ 60 இலட்சம் வாங்கினார்கள்.

“இப்படி பணத்தை வாங்கிக் கொண்டு சான்றிதழ் தருவதற்கு பிச்சை எடுக்கலாம்” என்று ஒரே போடாக போட்டார்.

உண்மையைப் போட்டுடைத்தவர் என்று பல அடைமொழிப் பட்டங்களோடு மன்சூல் அலிகான தற்போது நெட்டிசன்கள், மீம் கிரியேட்டர்ஸ் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.