’மனசாட்சிப்படி நடந்துகொள்ளாமல் தான் ஏற்றுக்கொண்ட இரண்டு பதவிகளுக்குமே துரோகம் இழைத்தவர் நடிகர் விஷால். அடுத்த தேர்தலில் போட்டியிட்டால் கண்டிப்பாக அவர் தோற்கடிக்கப்படுவார்’என்கிறார் டி.ராஜேந்தர்.

தயாரிப்பாளர் சங்கத்தை அரசு கையகப்படுத்திக்கொண்டது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த அவர் ,’நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என்று ஒரே நேரத்தில் இரட்டைக் குதிரைகளில் சவாரி செய்கிறார் விஷால். பதவிக்கு வருவதற்கு ஏகப்பட்ட வாய்ச்சவடால் விட்டார். ஆனால் அதில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. இரு பதவிகளுக்குமே துரோகம் இழைத்ததுதான் மிச்சம்.

தயாரிப்பாளர் சங்கம் என்பது ஒரு பொதுவான நிர்வாகம். அது பல தயாரிப்பாளர்களின் உழைப்பால் உருவானது. அதை ஏதோ தனது சொந்த வீட்டுச் சொத்தைப்போல் நினைத்துக்கொண்டு பொதுக்குழுவைக் கூட்டுவதில்லை. எந்த ஒரு விசயத்துக்கும் கணக்கும் காட்டுவதில்லை. பதவிக்கு வருவதற்கு திருட்டு வி.சி.டி.யை ஒழிப்பேன். தியேட்டர் டிக்கட் கட்டணத்தைக் குறைப்பேன்.கியூப் கட்டணங்களைக் குறைப்பேன் என்று ஏகப்பட்ட கப்சா விட்டார். இதில் எதையாவது செய்தாரா? இந்த தேர்தலில் மறுபடியும் போட்டியிட்டால் மண்ணைத்தான் கவ்வுவார் விஷால்’ என்று கிழித்துத் தொங்கவிடுகிறார் டி.ஆர்.