இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தற்போது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து மிக பெரிய பட்ஜெட்டில், தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்பைடர் படத்தை இயக்கி வருகிறார். தற்போது இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் விஜயை வைத்து இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஸ்பைடர் படத்தின் ஒரு சில காட்சிகள்  யு-டியூபில் வெளியாகியதாக ஒரு தகவல் வைரலாக பரவியது.

இதனை சற்றும் எதிர்பார்க்காத இயக்குனர் முருகதாஸ் ஒரு நிமிடம் அதிர்ந்து போய் விட்டாராம், பின் இது குறித்து விசாரித்த போது, , மகேஷ் பாபு ரசிகர்கள் புகைப்படங்களை வைத்து செய்த வேலை என்று தெரியவந்துள்ளது.

தற்போது  இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து ஸ்பைடர் படத்தின் ட்ரைலர் விரைவில் வரவுள்ளது, மேலும் இந்த படத்தை சரஸ்வதி பூஜை அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.