பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் அவருடைய மனைவி கிரண் ராவ் ஆகியோருக்கு பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்தபடியே பன்றி காய்ச்சலுக்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தி நடிகர் அமீர்கான், நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தின் பரிசளிப்பு வழா ஒன்று நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் ஆகியோர்  கலந்து கொள்வதாக இருந்தது.

ஆனால் அவர்கள் இருவருக்கும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களது ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அமீர்கானும், அவரது மனைவியும் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் அவர்கள் இருவரும் பங்கேற்க இருந்த பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்த அமீர்கான்  வீடியோ கான்பிரன்சிங் மூலம் தாம் நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாததை விளக்கினார்.

ஆனால் அமீர்கானுக்கு கைகொடுத்த நடிகர் ஷாருக்கான் அவருக்கு பதிலாக புனேயில் நடைபெற்ற சத்யமேவ ஜெயதே வாட்டர் கப் நிகழ்வில் பங்கேற்றார்.