Asianet News TamilAsianet News Tamil

இந்த படத்தை எடுத்து விட்டு ஊர் ஊராக ஓடி ஒளிந்த இயக்குனர்...! பொங்கி எழுந்த விஷால்..!

swathi murder movie numgambakkam director speech
swathi murder movie numgambakkam director speech
Author
First Published May 22, 2018, 12:32 PM IST


கடந்த, 2016 ஆம் ஆண்டு தமிழகத்தையே உள்ளுக்கிய சம்பவங்களில் ஒன்று, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்கிற பெண் பொறியாளர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவம். தற்போது இந்த சம்பவத்தை மையப்படுத்தி, திரைக்கதை அமைத்து படமாக இயக்கி இருக்கிறார் S.D.ரமேஷ் செல்வன்.

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய விஷால்... இந்த படத்தின் முந்தைய டைட்டிலான 'சுவாதி கொலை வழக்கு'  படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொண்டேன்.

ஒரு நிஜ சம்பவத்தை படமாக்கும் போது, அது சம்மந்தமான டைட்டில் வைப்பது தானே நியாயம். இந்த படத்திற்கும் அந்த டைட்டில் தானே பொருத்தமாக இருந்தது. அப்புறம் எதுக்கு இப்போ 'நுங்கம்பாக்கம்' என்று டைட்டிலை மாற்றினீர்கள் சென்சாருக்காகவா இல்லை யாருடைய நெருக்குதலுக்காகவா... என்று கேள்வி எழுப்பினார்.  இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது அதே எதிர்பார்ப்பு தனக்கும் இருப்பதாக கூறினார்.

மேலும், நான் நடித்து சில நாட்களுக்கு முன் வெளியான,  இரும்புத்திரை படத்துக்கு போராட்டம் நடத்தி இரண்டு காட்சிகளை கேன்சல் செய்த கொடுமையையும் சந்தித்தேன். டிஜிட்டல் இந்தியா ஆதார் கார்டு பற்றி சொல்லப் பட்டதால் நானும் பிரச்சனையை சந்தித்தேன். பிரச்சனையை சந்திப்போம் என்றார்

இவரை தொடர்ந்து பேசிய இந்த படத்தின் இயக்குனர் S.D.ரமேஷ்செல்வன்... ஒரு கொலை பற்றிய கதையை படமாக எடுத்து விட்டு நான் ஊர் ஊராக ஓடி ஒளிய வேண்டியதாகி விட்டது.

ஜெயிலுக்கு மட்டும் தான் போகல..அந்தளவுக்கு பிரச்சனைகளை சந்தித்து விட்டேன்..

எனக்கு வேற வேலை தெரியாது சினிமா மட்டும் தான் தெரியும். அதுக்காக தான் போராடிக் கொண்டிருக்கிறேன் நிச்சயம் 'நுங்கம்பாக்கம்' நல்ல படமாக வரும் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios