sv sekar resign the nadigar sangam trusty designation
நடிகர் நாசர் தலைமையில் இயங்கி வரும் நடிகர் சங்கத்தில், டிரஸ்டி பொறுப்பு வகித்து வரும் நடிகர் எஸ்.வி.சேகர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததாக சமூக வலைதளத்தில் அறிவித்தார். இதை தொடர்ந்து தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதில் அவர் கூறி இருப்பதாவது.. நம்சங்க தேர்தல் முடிந்தபின் என்னை நடிகர் சங்க டிரஸ்டிக்களில் ஒருவனாக நியமித்து என்னுடைய அறிவுரை,ஆலோசனைகள்,வழி நடத்துதல் தேவை என கேட்டுக்கொண்டீர்கள். ஆனால் ஒரு வருடத்தில் பல மாற்றங்கள். கையெழுத்திடுவதற்கு மட்டும் டிரஸ்டி.
.jpg)

அதே போல் சமீபத்தில் நடந்த மலேசிய காலை விழாவிலும் பல குளறுபடிகள்.பல கலைஞர்கள் மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள் என தெரிந்து கொண்டேன் . குறிப்பாக இயக்குனர் சங்கதலைவர் விக்ரமன்,R சுந்தரர்ராஜன், பார்த்திபன் ,இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் போன்ற பலர். இதன் பெயர்தான் நிர்வாக கோளாறு. இப்படி அரை குறையாக செய்வதற்கு எதற்கு பார்க் ஹோட்டலில் இத்தனை நாட்கள் இவ்வளவு ரூம் போட்டு நம் டிரஸ்ட் பணம் செலவழிக்கப்படவேண்டும்.?
ரஜினி கமலுக்கு மரியாதை கொடுப்பதில் தவறில்லை ஆனால் அதே மரியாதையை அனைத்து மூத்த கலைஞனர்களுக்கும் கொடுக்கத் தெரிய வேண்டும். அதை எப்படி என்று நம் முன்னாள் தலைவர் திரு.
விஜயகாந்த் அவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் திருந்த வாய்ப்பில்லை.
மலேசியாவில் பிட்சை எடுக்க வந்த தமிழ் நடிகர்கள் தலைப்பிட்டு வந்த பத்திரிகை பார்க்கவில்லையா?

இத்தனை பணம் மலேசிய தமிழர்கள் மூலம் சம்பாதிக்கும் நாம் நலிந்த மலேசிய தமிழ் குழந்தைகள் கல்விக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் குறைந்து போய் விடுவோமா?
பணம் தேவைதான் ,அது சுய மரியாதையை விற்று சம்பாதிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
நம் நடிகர் சங்க மூத்த நாடகக்கலைஞர்கள் சிலரை அழைத்துக் சென்று அரிச்சந்திர மயானகாண்டம் காட்சி
நடித்திருந்தால்(15 நிமிடம் மட்டுமே வரும் ) அது நீங்கள் நாடக கலைஞர்களை உண்மையாக நேசிக்கிறீர்கள் ஓட்டுக்காக அல்ல என்றாவது தெரிந்து இருக்கும். அதையும் செய்யவில்லை.
ஆகவே என் மனசாஷிக்கு எதிராக நம் சங்கத்தின் பக்கம் ஏற்படும் தவறுகளுக்கு நான் உடன்பட முடியாது என்பதாலும் டிரஸ்டி என்ற பதவி நடிகர் சங்கத்தை பொருத்த வரையில் ஒரு அலங்காரப்பதவியாக கருதப்படுவதாலும்,மற்ற சகா கலைஞர்களுக்கு உங்களால் ஏற்பட்ட அவமரியாதைக்காகவும் எனக்களிக்கப்பட்ட டிரஸ்டி பதவியை ராஜினாமா செய்கிறேன்.
இதுவரை என் இமெயிலில் குறிப்பிட்ட பதில் இல்லா கேள்விகளுக்காகவும்,என் ஒப்புதல்
இல்லாத செயல்பாட்டுகளுக்கும் .

நான் பொறுப்பாக மாட்டேன் என்பதையும் இக்கடிதம் மூலம் உறுதி செய்கிறேன்.
என் கடிதத்தின் மூலம் ரோசப்பட்டு நீங்கள் அனைவரும் ராஜினாமா செய்தாலும் நம் சங்க கட்டிடம் கட்டப்படும்.
அடுத்தமுறை வரும் தேர்தலில்
நீங்கள் யாரும் ஜெயிக்கவும் முடியாது என கூறிக்கொள்கிறேன்.
இவ்வுலகில் யாரும் நிரந்தரமில்லை என்பதை காலமும் அனுபவமும் உங்களுக்கு உணர்த்தும்.
பொது வாழ்வில் எவ்வளவு நேர்மையாக வாழ வேண்டும் என்று நம் மூத்த கலைஞர் திரு சிவகுமார் அவர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள். என்று கூறியுள்ளார்.
