இத்தனை நாட்கள் வாய் திறக்காமல் இருந்த ஓ.பன்னீர் செல்வம், தற்போது அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் உள்ள சசிகலா மீது பல குற்றச்சாட்டுகளை சுமாற்றினார்.
மேலும் நான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது கூட சசிகலாவின் வற்புறுத்தலால் தான் என்றும், மக்கள் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் பெற தயார் என பல அதிரடி தகவல்களை வெளியிட்டார்.
இதன் காரணமாக, தற்போது அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் வகித்து வந்த பொருளாளர் பதிவியில் இருந்து அவரை நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார் பொதுச்செயலாளர் சசிகலா.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வரலாறு திரும்பியுள்ளது என ஒரு சில நினைவுகளை கூறியுள்ளார் நடிகர் எஸ்.வி.சேகர். அவர் கூறுகையில்...
அன்று நடிகர் எம்.ஜி.ஆர் அரசியல் வாழ்க்கையில் நடந்த அதே நிகழ்வு தான் தற்போது முதலமைச்சர் ஓபிஎஸ்சுக்கும் நடந்துள்ளது என்றும் இதன் மூலம் வரலாறு திரும்பி இருக்கிறது என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
முதலில் திமுக பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர் பின்னர் ஆரம்பித்த கட்சிதான் அதிமுக தற்போது தமிழ்நாட்டை ஆண்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததுதான்.
இதே போல் நேற்றுவரை அமைதியாக இருந்த முதலமைச்சர் ஓபிஎஸ், பொதுசெயலாளர் சசிகலா மீது பல குற்றச்சாட்டுகள் வைத்ததால் அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார், இதையே இப்படி விமர்சித்துள்ளார் எஸ்.வி.சேகர்.
