பிரபஞ்ச அழகி என்கிற பட்டதை பெற்று இந்தியாவிற்க்கு பெருமை சேர்த்தவர் சுஷ்மிதா சென். பின் பாலிவுட் திரையுலகில் நடிகையாக கால் பதித்த இவர் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 

தமிழில் இவர் நடிகர் நாகர்ஜுனாவிற்க்கு ஜோடியாக 'ரட்சகன்' படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றதால். தொடர்ந்து தமிழில் நடிக்க வாய்புகள் வந்தது. ஆனால் அப்போதைக்கு அவர் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிசியாக நடித்து வந்ததால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க முடியாமல் போனது. 

திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்ந்து வரும் இவர் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். 42 வயதை எட்டியும் தன்னுடைய உடலை தகுந்த ஒர்கவுட் செய்து கட்டுக்கோப்பாக வைத்துள்ள இவர் அவ்வப்போது ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவார். 

பட வாய்ப்புகள் இல்லாததால், தற்போது தன்னுடைய குழந்தைகளை கவனித்து வரும் இவர் புதிதாக ஒரு டாட்டூ குத்தியுள்ளார். இடுப்பின் பின் பகுதியில் ஒரு புலி தாமரை மேல் இருப்பது போல் இந்த டாட்டூ உள்ளது. 

இதனை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கதில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் பலர் உங்களுடைய வயதுக்கு இது தேவையா? என்பது போல் கேள்விகளை எழுப்பி விமர்சித்து வருகின்றனர்.