Sushmita Sen SEXIEST Workout At 42

உலக அழகியானபின் நடிகையாக இந்திய சினிமாவில் கலக்கியவர் சுஷ்மிதா சென். தற்போது 42 வயதாகும் சுஷ்மிதா சென், எப்போதுமே கவர்ச்சி ததும்பும் அழகு பதுமயாகவும், ஃபிட்டாக இருக்க நினைப்பவர் தற்போது ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

பாலிவுட்டின் கவர்ச்சிக் கன்னி, இளைஞர்களின் ட்ரீம் டால் சுஷ்மிதா சென். முன்னாள் உலக அழகியான இவர், ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2010-ம் ஆண்டு வெளிவந்த 'நோ பிராப்ளம்' என்ற படத்தில் நடித்தார்.



இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் நடந்த பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுஷ்மிதாவிடம், நீங்கள் எப்போது மீண்டும் சினிமாவிற்கு வருவீர்கள் என கேட்டதற்கு, "நான் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. தேவை ஏற்படும் போது நிச்சயம் நடிப்பேன்."

"அப்படி நான் நடிக்கும் படம் ரசிகர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும். அது ஐந்து பேராக இருக்கலாம் அல்லது ஐந்தாயிரம் பேராக கூட இருக்கலாம், அதுபற்றி கவலையில்லை. ரசிகர்களுக்காக படம் பண்ண வேண்டும். அதற்கான நேரம் வரும்போது நிச்சயம் நான் மீண்டும் படங்களில் நடிப்பேன்" என்றார்.



இந்நிலையில், நேற்று ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஜிம்னாஸ்டிக் ரிங்கில் நன்றாக வளைந்து தலைகீழாக உடற்பயிற்சி செய்வதை காட்டியுள்ளார்.



வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலருக்கும் அது ஆச்சர்யத்தைக் கொடுத்துள்ளது. 42 வயதில் செம ஃபிட்டாக இருக்கிறாரே என சுஷ்மிதா சென் வீடியோவால் ஷாக்காகியுள்ளனர்.