பாலிவுட்டின் இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட ஜூன் மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மரணத்தில் காதலி ரியா சக்ரபர்த்திக்கு தொடர்பு இருப்பதாக சுஷாந்தின் தந்தை புகார் அளித்ததன் பேரி, செப்டம்பர் மாதம் 8ம் தேதி ரியா சக்ரபர்த்தி கைது செய்யப்பட்டார். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.

அதாவது ரியா சக்ரபர்த்தியின் செல்போனியில் சிக்கிய வாட்ஸ் அப் மெசெஜ்கள் மூலமாக அவருக்கும் போதைப்பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருப்பது அம்பலமானது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் ரியா, பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கூற, தற்போது அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

 

இதையும் படிங்க: அந்த விஷயத்தில் நயனையே அடித்து தூக்கிய வனிதா... பீட்டர் பாலுடன் கோவாவில் களைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்...!

இந்நிலையில் ஜாமீன் கேட்டு ரியா சக்ரபர்த்தி தாக்கல் செய்த மனு மீது மும்பை நீதிமன்றம்ஜாமின் மறுத்து, ரியாவை அக்டோபர் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நிலையில், மும்பை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது.போதைப் பொருள் விவகாரத்தில் வசமாக சிக்கி உள்ள நடிகை ரியா சக்கரவர்த்தியின் தம்பி செளவிக் சக்கரவர்த்திக்கு ஜாமின் வழங்க மும்பை உயர்நீதிமன்றம் வழக்கம் போல மறுத்துவிட்டது.

இதையும் படிங்க: மேலாடை இன்றி... தனி அறையில் ஆண் நண்பருடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட மீரா மிதுன்...!

 

ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி ஒரு மாதத்திற்கு பிறகு ரியாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ள போதும், தினமும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தொடர்ந்து 10 நாட்களுக்கு சென்று கையெழுத்து போட வேண்டும். மேலும், தனது பாஸ்போர்ட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும், அனுமதி பெறாமல் எங்கேயும் செல்லக் கூடாது என பல நிபந்தனைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.