Asianet News TamilAsianet News Tamil

சுஷாந்த் தற்கொலை வழக்கில் அதிரடி டுவிஸ்ட்... சிபிஐக்கு மாறியது விசாரணை...!

இதனால் ரியா சக்ரபர்த்தியை விசாரிக்க பாட்னா போலீசாருக்கு எவ்வித தடையும் இல்லை என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. 

Sushant Singh Rajput Suicide case Transfer to CBI
Author
Chennai, First Published Aug 5, 2020, 8:12 PM IST

பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒன்றரை மாதம் ஆன நிலையில் தற்போது அவரின் தந்தை கே.கே.சிங், சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக ரியா சக்ரபர்த்தி மீது புகார் கூறியிருந்தார். 

Sushant Singh Rajput Suicide case Transfer to CBI

இதையடுத்து தற்கொலைக்கு உதவுதல், தவறாக வழிநடத்துதல், தவறான கட்டுப்பாடு, வீட்டில் திருட்டு, மோசடி, கிரிமினல், நம்பிக்கையை மீறிய செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த புகாரில் ரியா தன் மகனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 கோடி வரை மாற்றியுள்ளதாகவும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றச்சாட்டியிருந்தார். 

Sushant Singh Rajput Suicide case Transfer to CBI

இந்நிலையில் பாட்னா போலீசில் பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பையில் விசாரிக்க உத்தரவிடக்கோரி ரியா சக்ரபர்த்தி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாட்னா போலீசார் தனனி விசாரிக்க கூடாது என்றும், அதிலிருந்து இடைக்கால பாதுகாப்பு தரும் படியும் கேட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரியா சக்ரபர்த்தியின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. 

Sushant Singh Rajput Suicide case Transfer to CBI

 

இதையும் படிங்க: படுக்கையில் ஆண் நண்பருடன் அமலா பால்... பீர் பாட்டிலுடன் பார்ட்டி கொண்டாட்டம்... சர்ச்சையை கிளப்பும் போட்டோஸ்!

இதனால் ரியா சக்ரபர்த்தியை விசாரிக்க பாட்னா போலீசாருக்கு எவ்வித தடையும் இல்லை என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமின்றி சுஷாந்த் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற பீகார் அரசின் பரிந்துரையையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதையடுத்து தற்போது அந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதால் ரியா சக்ரபர்த்திக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios