பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஞாயிற்றுகிழமை மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 34 வயதே ஆன சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பாலிவுட்டில் மிகப்பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்படும் நிலையில், இதுவரை அவருடைய வீட்டில் இருந்து கடிதம் ஏதும் கைப்பற்றப்படாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

 

இதையும் படிங்க:  “இனி இவருக்கு பதில் இவர்”.... சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலில் அதிரடி மாற்றம்...!

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிலர் சுஷாந்தின் வளர்ச்சி பிடிக்காமல் அவரது படவாய்ப்புகளை தட்டிப்பறித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதனால் சுஷாந்திற்கு கூடுதல் மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் தகவல்கள் வெளியானது. பாலிவுட்டில் எப்போதுமே வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தான் அதிகம். புதிதாக வருபவர்களை பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் வளரவிடுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துவருகிறது. 

சுஷாந்த் தற்கொலை தொடர்பாக அவரது வீட்டில் வேலை பார்த்தவர்கள், முன்னாள் காதலி உட்பட 19 பேரிடம் இதுவரை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட பாந்த்ரா வீட்டில் இருந்து 5 டைரிகள் கைப்பற்றப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை கூட்டியுள்ளது. அந்த டைரியில் தனது மரணத்திற்கான காரணம் குறித்து சுஷாந்த் ஏதாவது குறிப்பு எழுதியுள்ளார் என போலீசார் தீவிரமாக அலசி ஆராய்ந்து வருகின்றனர். 

 

இதையும் படிங்க: 8 வருஷத்துக்கு முன்னாடி அனிருத் இப்படி தான் இருந்தார்... வைரலாகும் பிரபல நடிகர் ஷேர் செய்த போட்டோ...!

இந்நிலையில் சுஷாந்தின் சகோதரி ஸ்வேதா கீர்த்தி தனது முகநூல் பக்கத்தில் உருக்கமான இரங்கல் பதிவு ஒன்றை பகிர்ந்தார். ஆனால் சிறிது நேரத்திலேயே என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அதை டெலிட் செய்து விட்டு, அதேபோல் முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோசியல் மீடியா கணக்குகளையும் டெலிட் செய்துவிட்டார். 

 

இதையும் படிங்க:  3வது திருமணத்திற்கு ஜூன் 27-யை தேர்ந்தெடுத்தது ஏன்?... லைவ் வீடியோவில் கண்ணீர் விட்டு கதறிய வனிதா....!

அந்த பதிவில், “நீ இப்போது எங்களுடன் உடலளவில் இல்லை. நீ அதிக வலியுடன் இருந்திருக்கிறார் என்பது எனக்கு தெரியும். நீ போராளி அதை தையரித்துடன் எதிர் கொண்டிருந்தாய். நீ அனுபவித்த வலிகள் அனைத்திற்கும் நான் வருந்துகிறேன். என்னால் முடிந்திருந்தால் உன் அத்தனை வலிகளையும் நான் வாங்கியிருப்பேன். உன் கண்கள் எப்படி கனவு காண வேண்டுமென கற்றுத் தந்துள்ளது. உன் சிரிப்பு தூய்மையான அன்பை கொண்டிருந்தது. எங்கிருந்தாலும் நீ மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் இரு” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவும் சுஷாந்த் மிகுந்த மன அழுத்தத்தில் பல பிரச்சனைகளை தாங்கிக்கொண்டு இருந்தார் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. ஆனால் அவரது சகோதரி ஏன் சோசியல் மீடியாவில் இருந்து வெளியேறினார் என்பது தான் ரசிகர்களுக்கு புரியாத புதிராக உள்ளது.