பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் நேற்று மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜூன் 15ம் தேதி நிகழ்ந்த இந்த துக்கத்தில் இருந்து சுஷாந்த் ரசிகர்கள் இன்னும் முழுவதுமாக வெளிவரவில்லை. இடை, இடையே சுஷாந்த் தற்கொலைக்கான காரணம் குறித்து அவ்வப்போது வெளியாகும் பகீர் தகவல்கள் பாலிவுட்டை அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடந்த 6 மாதமாகவே மன அழுத்தத்தில் இருந்த சுஷாந்த் தனது தந்தை, சகோதரிகள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் கூட பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. அதனால் தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் உறுதி செய்யப்பட்டது. 

 

இதையும் படிங்க: கொழு கொழுன்னு இருந்த வித்யுலேகா ராமனா இது?... 30 கிலோ வரை எடையை அசால்டாக குறைத்து ஆளே மாறிட்டாரே....!

இதனிடையே கடந்த 6 மாதங்களில் மட்டும் சுஷாந்த் கைவசம் இருந்த 7 பட வாய்ப்புகள் பறிபோனதாகவும், பாலிவுட்டின் முன்னணி பிரபலங்கள் பலரும் சுஷாந்தின் வளர்ச்சியை தடுக்க பல உள்வேலைகளை செய்ததாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இந்த குற்றச்சாட்டால் பாலிவுட் பிரபலங்களின் வாரிசு நடிகர், நடிகைகள் மீது ரசிகர்கள் செம்ம கடுப்பில் உள்ளனர். அவர்களை கண்டபடி விமர்சிக்கும் ட்ரால் போஸ்ட்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சுஷாந்த் தற்கொலை தொடர்பாக தினம், தினம் வெளியாகும் தகவல்கள் பாலிவுட்டில் இருக்கும் பலரது தூக்கத்தையும் கெடுத்து வருகிறது. 

 

இதையும் படிங்க:  “சிறுத்தை” படத்தில் நடித்த குட்டி பாப்பாவா இது?.... கண்ணுபடும் அளவிற்கு அழகில் ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

சுஷாந்த் சிங் ராஜ்புட் இறப்பதற்கு முன்பு தில் பேச்சாரா என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மே மாதம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா பிரச்சனையால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. சுஷாந்தின் கடைசி படமான இதை தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டுமென ரசிகர்கள் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் கூட சுஷாந்தின் கடைசி படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார். 

 

இதையும் படிங்க: பிரபல நடிகருடன் ஜோடி போட்ட சாய் பல்லவி... வயிற்றெரிச்சலில் வாயை விட்ட ராஷ்மிகா மந்தனா...!

ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பிரச்சனை அதிகரித்து வருவதால் சுஷாந்த் படத்தை தியேட்டரில் வெளியிடுவது என்பது நடக்காத காரியமாகும். அதனால் அந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளது. ஜூலை 24ம் தேதி ஹாட்ஸ்டாரில் இந்த படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் முதலில் அதிருப்தியான சுஷாந்த் ரசிகர்கள், எப்படியோ இறந்து போன தனது நாயகனின் படத்தை பார்க்க போகிறோமே என்ற மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர்.