Tamil actor joins with Malayalam star in his upcoming movie
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் ”என்.ஜி.கே” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுவரை வெளியாகியிருக்கும் என்.ஜி.கே போஸ்டர்கள் இத்திரைப்படம் குறித்த ரசிகர்களின் ஆவலை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சாய் பல்லவி, ரகுல் பிரீதி சிங் ஆகியோர் சூர்யாவுடன் இத்திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா, இயக்குனர் கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. தற்போது கே.வி.ஆனந்த் அந்த தகவலை உறுதி செய்திருக்கிறார். மோகன் லாலும் ,சூர்யாவும் இணைந்து நடிக்க உள்ள இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது.
We are very much Honoured to have my lovely Hero @Mohanlal and Charming @Suriya_offl together in our next film. @LycaProductionspic.twitter.com/bOhAKPcQuu
— anand k v (@anavenkat) May 10, 2018
இந்த கூட்டணியை அமைத்து தந்ததற்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யாவும் தனது கருத்தை கே.வி.ஆனந்திற்கு தெரிவித்திருக்கிறார். மோகன்லாலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவு, இதன் மூலம் நிறைவேறியிருப்பதாக சூர்யா தெரிவித்திருக்கிறார். என்.ஜி.கே திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு ,இந்த புதிய திரைப்படம் தொடர்பான வேலைகள் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன
