தற்போது நடித்து முடித்திருக்கும் ‘சூரரைப் போற்று'படத்துக்குப் பின்னர் நடிகர் சூர்யா, ஹரி,கவுதம் மேனன்,பாலா ஆகிய மூன்று இயக்குநர்களில் ஒருவர் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்திகள் நடமாடி வருமிலையில் அவர் தனது தெலுங்கு மார்க்கெட்டை ஸ்திரப்படுத்துவதற்காக நேரடித் தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாக நம்பகமான தகவல்கள் நடமாடுகின்றன.

‘காப்பான்’ரிலீஸுக்குப் பின் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’படத்தில் நடித்துவந்தார் சூர்யா. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன் தினம் முடிவடைந்த நிலையில் அக்குழுவில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், உதவியாளர்கள் அனைவருக்கும் தங்கக்காசு பரிசளித்து மகிழ்வித்தார் சூர்யா. அப்படி தங்கக்காசு கொடுத்த சூர்யா தன்னை நம்பிக் காத்திருக்கும் மூன்று முன்னணி இயக்குநர்களுக்கு பட்டை நாமம் போட முடிவெடுத்திருக்கும் இன்னொரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

தனக்கு சூர்யா கால்ஷீட் தருவார் என்ற நம்பிக்கையில் நீண்ட நாட்களாக தேவுடு காத்து வருகிறார் இயக்குநர்  ஹரி. அதே போல் காத்திருக்கும் இன்னும் இரு இயக்குநர்கள் சூர்யாவுக்கு பெரும் திருப்பு முனையைக் கொடுத்த கவுதம் மேனன், பாலா ஆகியோர். ஆனால் இம்மூவரௌக்கும் முன்னால் சூர்யா ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது தொடர்பாக அண்மையில் ஐதராபாத் சென்ற சூர்யா, பிரபல தெலுங்கு பட இயக்குனர் பி.வி.எஸ்.ரவி மற்றும் கதாசிரியர் கோபி மோகனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தயாரிப்பாளர் மோகன் பாபு வீட்டில் நடந்துள்ளது. மோகன் பாபு சூர்யாவின் சூரரை போற்று படத்தில் நடித்துள்ளார். இந்த சந்திப்பின் போது சூர்யாவின் நண்பரும் நடிகருமான விஷ்ணு மஞ்சுவும் உடன் இருந்தார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.