உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தற்போது அணைத்து படங்களின் படப்பிடிப்பும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கும், சீரியல் பணிகளுக்கும் மட்டுமே அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், சூரரை போற்று படம் குறித்து வெளியாகியுள்ள தகவல் தற்போது, கோலிவுட் திரையுலகத்தையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சமீபத்தில் தான் நடிகர் சூர்யா, தயாரிப்பில் ஜோதிகா நடித்திருந்த 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகி, பெண்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்றது.

இதை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா சூரரை போற்று படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்... இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்து விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பணிகள் நிறுத்தப்பட்டது அனைவரும் அறிந்தது தான்.

அரசு தரப்பில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அனுமதி அளித்ததால், அந்த பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளது. எனவே மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என்று தகவல் வெளியான நிலையில் தற்போது இந்த திரைப்படம் சென்சாரில் ’யு’ சான்றிதழ் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ’சூரரைப்போற்று’ திரைப்படம் திரையிடுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கோலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பிரச்சனை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், இப்போதைக்கு திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு இல்லை என கூறப்படுவதால், ஒரு வேலை ஓடிடி தளத்தில் வெளியாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதா என்கிற சந்தேகத்தையும் எழுப்பி உள்ளது இந்த அறிவிப்பு. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.