தனது ‘விஸ்வாசம்’ படத்தின் முக்கிய டெக்னீஷியன்களோடு சூர்யா படத்தை சிவா இயக்கவுள்ளதை சற்றுமுன்னர் படத்தின் தயாரிப்பாளர் உறுதி செய்துள்ளார்.

நாம் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு குறிப்பிட்டிருந்தபடி சூர்யா 39 பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளர் வெற்றி, ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன், எடிட்டர் ரூபன் உட்பட 90 சதவிகித ‘விஸ்வாசம்’ பட டெக்னீசியன்களே இப்படத்தில் பணியாற்ற உள்ளனர்.

படம் முழுக்க முழுக்க நகரத்து சப்ஜெக்ட் என்றும் சிவாவின் வழக்கமான மசாலா அம்சங்கள் இப்படத்திலும் இருக்கும் என்றும் படத்தின் கதாநாயகி மற்றும் இசையமைப்பாளர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்தார்.