surya sister brindha shocking for jothika why?
பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும், தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். இவர்களை தொடர்ந்து தற்போது, மிஸ்டர் சந்திரமௌலி திரைப்படத்தின் மூலம் பாடகியாக அவதாரம் எடுத்துள்ளார் சிவகுமாரின் மகள் பிருந்தா.
இந்த படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு, பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வரும் பிருந்தா, இந்த படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது குறித்தும், தன்னுடைய குடும்பத்தைப் பற்றியும் பல ஸ்வாரஸ்யமான தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்துக்கொண்டு வருகிறார்.
மேலும் நடிகையும், தன்னுடைய சகோதரர் சூர்யாவின் மனைவி, ஜோதிகாவை பற்றி கூறியுள்ளார்.

அப்போது தன்னுடைய அண்ணி ஜோதிகாவின் செயலை பார்த்து மிகவும் ஷாக் ஆன, தகவலை பிருந்தா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்... "பொதுவாக நம் வீடுகளில், ஏதேனும் விசேஷம் என்றால், விளக்குகள் ஏற்றி, பல வகை பலகாரங்கள் சமைத்து, கடவுளுக்கு படைத்தது விட்டு, குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடுவோம்.

ஆனால் தன்னுடைய அண்ணி, வீட்டையே பூக்களால் அலங்காரம் செய்து, சாதாரண பண்டிகையை கூட பிரமாண்டமான விசேஷம் போல் கொண்டாடுவார்கள். முன்னாடி நின்று அனைத்து வேலையும் அவரே பார்த்துக்கொள்வார்.
மிகவும் பிரபலமான நாயகியாக இருந்த இவர், இது போன்ற வேலைகளையும் செய்வாரா? என முதலில் அவரை தான் ஷாக்காக பார்த்ததாக கூறியுள்ளார்.
