கடந்த 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை வனிதா 3வது முறையாக கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னரே பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து பிள்ளைகள் இருப்பது வெளியே வந்தது. இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் பேசு பொருளாக மாறியது. அந்த வரிசையில் சேர்ந்து கொண்ட சூர்யா தேவி என்ற பெண், தேவையில்லாமல் வனிதாவின் 3வது திருமணம் குறித்து யூ-டியூப்பில் தரக்குறைவாக விமர்சித்து வந்தார். 

தனது திருமண விவகாரம் குறித்து சம்பந்தப்பட்டவர்களை விட, எந்த ஒரு சம்மந்தமும் இல்லாமல் சிலர் ஓவராக விமர்சிப்பது தான் வனிதாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. தன்னை பற்றி தேவை இல்லாமலும் அசிங்கமாக பேசி யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்டு வருவதாக சூர்யா தேவி என்ற பெண் மீது வனிதா போரூர்  எஸ்.ஆர்.எம்.சி. காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

 

இதையும் படிங்க: முதன் முறையாக குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாடகி சைந்தவி... குவியும் லைக்ஸ்...!!

குறிப்பாக சூர்யா தேவி ஒரு கஞ்சா வியாபாரி என்றும், அதற்க்கு ஆதாரமாக ஆடியோ ஒன்றையும் வெளியிட்டார் வனிதாவின் லாயர்.இதை தொடர்ந்து, வனிதா தன் மீது அவதூறு பரப்பி வருவதாக, சூர்யா தேவியும் பதிலுக்கு வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதில் பொய்யான தகவல்களை வெளியிட்டு தனக்கு மன உளைச்சலை வனிதா ஏற்படுத்தியதாக புகார் அளித்திருந்தார். இந்நிலையில் வனிதா அளித்த புகாரின் பேரில் நேற்று நள்ளிரவில் சூர்யா தேவி கைது செய்யப்பட்டார். 

 

இதையும் படிங்க: அடுத்த ஆப்பு இவங்களுக்குத் தான்... பட்டியலை வெளியிட்டு பகீர் கிளப்பிய வனிதா...லிஸ்டில் இருப்பது யார் தெரியுமா?

வனிதா, சூர்யா தேவி அளித்த புகார்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வடபழனி மகளிர் காவல்நிலைய போலீசார் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு தொடர்பான சட்டப்பிரிவின் கீழ் சூர்யா தேவியை கைது செய்தனர். வனிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சூர்யா தேவி, இன்று ஜாமீனில் வெளியாகியுள்ளார். தனது வழக்கறிஞர் மூலமாக சூர்யா தேவி ஜாமீனில் வெளியே வந்துள்ளதாகவும், அவருடைய குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.