வனிதா - பீட்டர் பால் திருமண விவகாரத்தில் கருத்து சொல்லாதவர்களே இல்லை எனும் அளவிற்கு சோசியல் மீடியாவில் முக்கிய விவாத பொருளாக மாறிவிட்டது. கொரோனா அப்டேட்டுகளையே பின்னுத்தள்ளும் அளவிற்கு ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது வனிதா 3வது திருமண விவகாரம். பீட்டர் பால் முதல் மனைவியை முறையாக விவாகரத்து செய்யாமல் வனிதாவை கரம் பிடித்ததால் பலரும் கண்டமேனிக்கு கருத்து கூறி வருகின்றனர். 

அப்படி தான் சூர்யா தேவி என்பவரும் வனிதா விஜயகுமாரை தரக்குறைவாக விமர்சித்து யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்டு வந்தார். தன்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதாக சூர்யா மீது போரூர் காவல்நிலையத்தில் வனிதா புகார் அளித்திருந்தார். அத்தோடு சூர்யா தேவி ஒரு கஞ்சா வியாபாரி என்றும் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். தை தொடர்ந்து, வனிதா தன் மீது அவதூறு பரப்பி வருவதாக, சூர்யா தேவியும் பதிலுக்கு வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதில் பொய்யான தகவல்களை வெளியிட்டு தனக்கு மன உளைச்சலை வனிதா ஏற்படுத்தியதாக புகார் அளித்திருந்தார்.

 

 

இதையும் படிங்க: நடிகர் ராணாவை ஓட ஓட விரட்டும் கொரோனா... தீயாய் பரவும் தொற்றால் திருமண இடம் மாற்றம்?

இந்த இரு புகார்கள் மீதும் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வனிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் கடந்த 22ம் தேதி முன்பு சூர்யா தேவி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அன்றைய தினமே சூர்யா தேவி ஜாமீனில் வெளியே வந்த நிலையில் அவருக்கும், அவரிடம் விசாரணை நடத்திய பெண் காவல் ஆய்வாளருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

 

இதையும் படிங்க: அழகில் அம்மாவையே ஓரங்கட்டும் ‘ரோஜா’ மதுபாலாவின் அழகிய மகள்கள்.. வைரலாகும் க்யூட் போட்டோஸ்...!

இந்நிலையில் மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சூர்யா தேவி, நான் தலைமறைவாக இல்லை என்றும், தனக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் மறுத்துள்ளார். அப்படியே எனக்கு கொரோனா இருந்தாலும் அதை நான் பார்த்துக்கிறேன். அதுவும் ஒரு நோய் தான் என்னை நானே தனிமைப்படுத்திக்கொள்ளவும், சிகிச்சை பெறவும் தெரியும் மிகவும் ஆவேசமாக அந்த வீடியோவில் பேசியுள்ளார்.