பிக்பாஸ் நிகழ்ச்சியை விட படு சூடாக போய்க்கொண்டிருக்கும் வனிதா மூன்றாவது திருமண விவகாரம். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அதிகமாக வனிதாவை விமர்சிப்பதை விட, எந்த ஒரு சம்மந்தமும் இல்லாமல் சிலர் ஓவராக விமர்சிப்பது தான் வனிதாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: சூப்பர் ஸ்டார் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் வீடு இவ்வளவு பிரமாண்டமா..! வாங்க பார்க்கலாம்..!
 

தன்னை பற்றி தேவை இல்லாமலும் அசிங்கமாக பேசி விமர்சிப்பதாக சூர்யா தேவி மற்றும் ரவீந்திரன் ஆகியோர் மீது   வனிதா வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். குறிப்பாக சூர்யா தேவி ஒரு கஞ்சா வியாபாரி என்றும், அதற்க்கு ஆதாரமாக ஆடியோ ஒன்றையும் வெளியிட்டார் வனிதாவின் லாயர்.

இதை தொடர்ந்து, வனிதா தன் மீது அவதூறு பரப்பி வருவதாக, சூர்யா தேவியும் பதிலுக்கு வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதில் பொய்யான தகவல்களை வெளியிட்டு தனக்கு மன உளைச்சலை வனிதா ஏற்படுத்தியதாக புகார் அளித்தார். 

மேலும் செய்திகள்: அப்பாவை போல் ஒரு மகள், அம்மாவை போல் ஒரு மகள்! கியூட்டாக ஒரு மகன்! ஏ.ஆர்.ரகுமான் பிள்ளைகளின் அரிய புகைப்படங்கள்
 

இதை தொடர்ந்து நேற்று, வனிதா மற்றும் சூர்யா தேவியின் புகார்களை வடபழனி போலீசார் சுமார் 3 மணிநேரம் விசாரணை செய்தனர். இருதரப்பை கேட்ட பின், இருவரையும் சமாதானம் ஆக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியதாக கூறப்படுகிறது. சூர்யா தேவியின் பேச்சால் மனம் நொந்து போன வனிதாவே ஒரு நிலையில் இறங்கி வர தயாராக இருந்தும், சூர்யா தேவி அவரிடம் மன்னிப்பு கேட்க முடியாது என கறாராக மறுத்து விட்டாராம்.

இதனால் இவர்களுடைய பனிப்போர் மீண்டும், விடியோவில் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா தேவி மேல் தான் தவறு உள்ளது என வனிதா தரப்பு கூறி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் சூர்யா விடாப்பிடியாத உள்ளது செம்ம ட்விஸ்ட்டாக அமைந்துள்ளது.