சின்னத்திரை காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் வீட்டில், சில ரவுடிகளுடன் புகுந்த சூர்யா தேவி சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்தியதாகவும், சின்னத்திரை நடிகை ஒருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிரபல முன்னணி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் சொந்தமாக யுடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். தன்னுடைய வீட்டிலேயே செட் அமைத்து சேனலுக்கு தேவையான படப்பிடிப்புகளை நடத்தி வருகிறார் நாஞ்சில் விஜயன்.

இந்நிலையில் இவர் நேற்று இரவு வளசரவாக்கம், வீரப்பா நகரில் உள்ள தன்னுடைய வீட்டில் சின்னத்திரை நடிகை சீபாவுடன் சேர்ந்து யூ டியூப் நிகழ்ச்சிக்காக படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது சிலர் அடியாட்களுடன் வீட்டிற்குள் நுழைந்த சூர்யா தேவி அங்கு இருந்தவர்களை சரமாரியாக தாக்கி விட்டு சென்றுள்ளார்.

இதில் நாஞ்சில் விஜயனுக்கு, சின்னத்திரை நடிகை சீபாவிற்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது காயமடைந்தவர்கள்  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாரகள்.

இந்நிலையில் சின்னத்திரை நடிகை சீபா, சூர்யா தேவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்துள்ளார். போலீசார் இந்த புகாரின் அடிப்படையிலும், நாஞ்சில் விஜயன் கொடுத்த புகாரில் அடிப்படையிலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.