surya converted the Muslim

தமிழ் சினிமாவில் நடித்துவரும் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா, இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும் தற்போதைய நடிகர்களில், அப்பா பேச்சை தட்டாத பிள்ளை என்கிற நல்ல பெயரும் இவருக்கு உண்டு.

இந்நிலையில், இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறுவது போல ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது, மூன்று நிமிடம் ஒளிபரப்பாகும் இந்த வீடியோவில், சூர்யா இஸ்லாம் மதத்தவரை போல ஆடைகள் மற்றும் தொப்பி அணிந்துள்ளார்.

மேலும் தொழுவது போலவும், அவருக்கு முஸ்லீம் மதத்தை சேர்த்த ஒருசிலர் மாலை அணிவித்து மரியாதையை செய்வது போல இருக்கிறது.

வைரலாக தற்போது பரவிவரும் இந்த வீடியோ குறித்து பதிலளித்து சூர்யா தரப்பினர். சூர்யா மதம் எதுவும் மாறவில்லை என மறுத்துள்ளனர்.

மேலும் இது, சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பு போது, ஏ.ஆர்.ரகுமான் மசூதிக்கு வர சொல்லி அன்பு கட்டளை போட்டதால், அதை ஏற்றுக்கொண்ட சூர்யா மசூதிக்குசென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறியுள்ளனர்.