நடிகர் சூர்யா சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அகரம் அறக்கட்டளை சார்பில் ‘நீட்’ என்ற புத்தக மருத்துவ தேர்வுக்கான புத்தகம் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் மேலும் 36 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய சிவக்குமார் கல்வி அறக்கட்டளை நிறைய மாணவர்களுக்கு கல்வி பயில உதவி செய்ததோடு, கடந்த பத்து ஆண்டுகளாக அகரம் கல்வி அறக்கட்டளையும் கல்விக்கு நிறைய உதவிகள் செய்து வருகிறது என்றும்.

இன்றைய சூழ்நிலையில் கல்வி முறையில் நிறைய கேள்விகள் இருக்கிறது. அதை அலசி ஆராயும் விதமாக அமைந்துள்ளது கல்யாணி ஐயா எழுதியுள்ள இந்த ‘நீட்’ என்ற புத்தகம். இந்த புத்தகத்தை ‘அகரம்’ மூலமாக வெளியிடுவதில் நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம் என கூறினார்.

ஒரு படத்தை பார்த்து அதற்கு விமர்சனம் கொடுக்கிறோம் . அதை இப்படி பண்ணியிருக்கலாம் அப்படி பண்ணிருக்கலாம் என்று டோனால்டு ட்ரம்பை அமெரிக்க எப்படி பிரதமராக அறிவித்தது என்பதை பற்றி அலசி ஆராய்ந்து பார்க்கும் நாம் நமது கல்வி முறையை பற்றி பேசுவதில்லை.

மற்ற விஷயங்கள் பற்றி பேசுவது மாதிரி எல்லோரும் நமது கல்வி முறைகள் பற்றியும் பேசவேண்டும். அப்போது தான் நல்ல கல்வி கிடைக்கும் என கூறிய அவர்.

மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்வது நல்ல கல்வி தான்! இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை பின்பற்றுங்கள் உங்கள் எதிர்கால வாழ்க்கை நன்றாக அமையும்.

இந்த புத்தகத்தில் எல்லோருக்கும் பயன்தரக்கூடிய நிறைய நல்ல கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளது என்றும்,  கல்வி தரத்தை மேம்படுத்தும் விதமாக இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதுபோன்ற கல்வி பணிகளில் அகரம் தொடர்ந்து ஈடுபடும்’’ என்று சூர்யா கூறினார்.