surya and jothika dauther is very luky why?

தமிழ் சினிமாவில் பலருக்கும் பிடித்த நட்சத்திர ஜோடி சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவருமே எங்கேயும் எப்போதும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்ததே இல்லை. தற்போதும் இளம் காதல் ஜோடிகள்போல் தான் நடந்து கொள்வார்கள்.

இந்நிலையில், இவர்களின் மகள் தியா இந்தியன் பெண்கள் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் கையால் ஒரு கோல்டன் கிரிக்கெட் பேட் வாங்கியுள்ளார்.

ஜுனியர் Women Inspiration என்ற வகையில் இந்த விருது தியாவுக்கு கிடைத்துள்ளது. தியா தன்னுடைய திறமைகளால் பல துறையில் நிரூபித்திருக்கிறாராம். அதன் காரணமாகவே இவருக்கு இப்படி ஒரு விருது கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் ஒருசிலரோ அவர் பிரபலத்தின் மகள் என்பதால் மட்டுமே இவருக்கு இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.