Asianet News TamilAsianet News Tamil

நடிகராக இல்லாமல் தயாரிப்பாராக முடிவெடுத்த சூர்யா... அதிரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் 'சூரரை போற்று'..!

நடிகர் சூர்யா, இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள 'சூரரை போற்று ' திரைப்படம், கண்டிப்பாக திரையரங்குகள் திறந்த பிறகு தான் ரிலீஸ் செய்யப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது, இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அதிகார பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
 

surya acting soorarai pootru movie released in amazon prime
Author
Chennai, First Published Aug 22, 2020, 1:59 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

நடிகர் சூர்யா, இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள 'சூரரை போற்று ' திரைப்படம், கண்டிப்பாக திரையரங்குகள் திறந்த பிறகு தான் ரிலீஸ் செய்யப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது, இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அதிகார பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

இது பற்றி, நடிகர் சூர்யா தரப்பில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது... "இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது'. என்ற எழுத்தாளர் பிரபஞ்சனின் வார்த்தைகள் நம்பிக்கையின் ஊற்று. கண்ணுக்கு தெரியாத வைரஸ், ஒட்டு மொத்த மனித குலத்தின் செயல்பாட்டையும் நிறுத்தி, வைத்திருக்கும் சூழலில், பிரச்சனைகளில் மூழ்கி விடமால், நம்பிக்கையுடன் எதிர்நீச்சல் போடுவதே முக்கியம்.

surya acting soorarai pootru movie released in amazon prime

இயக்குனர் சுதா கொங்கரா அவர்களின் பல ஆண்டுகால உழைப்பில் உருவாகியுள்ள, 'சூரரை போற்று' திரைப்படம் எனது திரைப்பயணத்தில் மிகசிறந்த படமாக நிச்சயம் இருக்கும். மிகப்பெரிய வெற்றியை அளிக்கும் என்று நம்புகிற இத்திரைப்படத்தை, திரையரங்கில் அமர்ந்து என் போரன்பிற்குரிய சினிமா ரசிகர்களுடன் கண்டு கழிக்கவே மனம் ஆவல் கொள்கிறது. அனால், காலம் தற்போது அதை அனுமதிக்கவில்லை. பல்துறை கலைஞர்களின் கற்பனை திறனிலும், கடுமையான உழைப்பிலும் உருவாகும் திரைப்படத்தை சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது தயாரிப்பாளரின் கடமை.

surya acting soorarai pootru movie released in amazon prime

எனது  '2 டி எண்டர்டெயின்மெண்ட், நிறுவனம் இதுவரை எட்டு படங்களை தயாரித்து வெளியீடு செய்திருக்கிறது. மேலும் பத்து படங்கள் தயாரிப்பில் உள்ளன. என்னைச் சார்ந்திருக்கிற படைப்பாளிகள் உட்பட பலரின் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. சோதனை மிகுந்த காலகட்டத்தில், நடிகராக இல்லாமல், தயாரிப்பாளராக முடிவெடுப்பதே சரியாக இருக்குமென நம்புகிறேன்.

surya acting soorarai pootru movie released in amazon prime

'சூரரை போற்று திரைப்படத்தை, அமேசான் ப்ரைம் வீடியோ' மூலம் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். தயாரிப்பாளராக மனசாட்சியுடன் எடுத்த இந்த முடிவை, திரையுலகை சார்ந்தவர்களும், என் திரைப்படங்களை திரையரங்கில் காண விரும்புகிற பொதுமக்களும், நற்பணி இயக்கத்தை சேர்ந்த தம்பி, தங்கைகள், உள்ளிட்ட அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமென அன்புடன் கெடுக்க கொள்கிறேன். உங்களின் அனைவரின் மனம் கவர்ந்த திரைப்படமாக 'சூரரை போற்று' நிச்சயம் அமையும், மக்கள் மகிழ்ச்சியோடு திரையரங்கம் வந்து படம் பார்க்கும் இயல்புநிலை திரும்புவதற்குள், கடினமாக உழைத்து, ஒன்றுக்கு இரண்டு படங்களில் நடித்து திரையரங்கில் ரிலீஸ் செய்துவிட முடியுமென நம்புகிறேன். அதற்கான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறேன்.

surya acting soorarai pootru movie released in amazon prime

இருப்பதை அனைவருடன் பகிர்ந்த வாழ்வதே சிறந்த வாழ்வு. இந்த எண்ணத்தை இன்றளவும் செயல்படுத்தியும் வருகிறேன். சூரரை போற்று திரைப்படம் வெளியியிட்டு தொகையில் இருந்து தேவை உள்ளவர்களுக்கு '5 கோடி ரூபாய்' பகிர்ந்தளிக்க முடிவு செய்திருக்கிறேன்.

பொதுமக்களுக்கும், திரையுலகை சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் கொரோனா யுத்த காலத்தில்' முன்நின்று பணியாற்றியவர்களுக்கும், இந்த ஐந்து கோடி ருபாய் பகிர்ந்தளிக்கப்படும், உரியவர்களிடம் ஆலோசனை செய்து அதற்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும், வாழ்த்தும் தொடர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இந்த நெருக்கடி சூழலை மனவுறுத்தியுடன் எதிர்த்து மீண்டும் எழுவோம் நன்றி. என சூர்யா தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios