பிரபல தனியார் தொலைக்காட்சியில் பீக் அவர்சில் ஒளிபரப்பாகி வரும் திரில்  தொடர் நந்தினி. இந்த சீரியலை தவறாமல் பார்க்கும் பல ரசிகர்கள் உள்ளனர். அதிலும் இந்த சீரியலில் குடும்பபாங்கான கதாப்பாத்திரத்தில், நடித்தாலும் சேலையில் கிளாமர் காட்டும் நடிகை நந்தினி ராம்முக்கு எக்க சக்க ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இந்த சீரியலின் படப்பிடிப்பு தளத்தில்  சீரியல் நடிகர்கள் அனைவருடனும் நடிகர் சூர்யா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதனால் இந்த சீரியலில் நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாரா என பலர் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.  இந்த சீரியலை இயக்குனர் சுந்தர் சி இயக்க, நடிகை குஷ்பு தயாரித்து வருகிறார்.