சூர்யா நடிப்பில் 'சூரரைப்போற்று' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியாகி, கடந்த 3 வருடங்களாக வெற்றி படம் கொடுக்க காத்திருந்த சூர்யாவுக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டும் இன்றி பல்வேறு பாராட்டுகளை பெற்று தந்தது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தன்னுடைய 40 ஆவது படத்தை நடிக்க உள்ளதாக ஏற்கனவே பார்த்தோம்.

சன்பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. அடுத்த மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் ஆரமபாகும் என கூறப்படுவதால், படம் குறித்த முக்கிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.
அந்த வகையில், தற்போது இந்த படத்திற்கு இசையமைக்க உள்ள இசையமைப்பாளர் குறித்த தகவலை, சன் பிச்சர்ஸ் நிறுவனம் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது. வீடியோ ஒன்றை வெளியிட்டு, சூர்யாவின் 40 ஆவது படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைக்க உள்ளதை உறுதி செய்துள்ளனர்.
இமான் பிறந்தநாளை முன்னிட்டு இந்த தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் இந்த படத்தில், 'டாக்டர்' படத்தில் நாயகியாக நடித்துள்ள பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது ஆனால் இதுகுறித்த எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சூர்யாவின் சகோதரர் கார்த்தியை வைத்து 'கடைக்குட்டி சிங்கம்' என மாபெரும் வெற்றி படத்தை தந்த இயக்குனர் பாண்டிராஜ், இப்போது அவரது அண்ணன் சூர்யாவை வைத்து மீண்டும் ஒரு ஜனரஞ்சகமான குடும்ப படத்தை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Music Director @immancomposer will be composing the music for #Suriya40bySunPictures@Suriya_offl #DirectorPandiraj #Suriya40 pic.twitter.com/h5SVfv5pTZ
— Sun Pictures (@sunpictures) January 24, 2021
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 24, 2021, 1:43 PM IST