நடிகர் சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள 40 ஆவது படம் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள 40 ஆவது படம் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சன்பிக்சர்ஸ் நிறுவனம், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த', மற்றும் நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ள 'தளபதி 65 ' ஆகிய பிரமாண்ட படங்களை தயாரித்து வருகிறது. இதை தொடர்ந்து, நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள 40 ஆவது படத்தையும் தயாரிக்கிறது.

இதுகுறித்து ஏற்கனவே அதிகார பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ள இசையமைப்பாளர் குறித்த தகவலை, சன் பிச்சர்ஸ் நிறுவனம் அதிகார பூர்வமாக வெளியிட்டது. 

இதை தொடர்ந்து இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ள பிரியங்கா அருள் மோகன் கமிட் ஆகியுள்ளார். மேலும் மேலும் இந்த படத்தில், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பல படங்களில் ஹீரோவாக நடித்த வினய் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனாவில் இருந்து சமீபத்தில் மீண்டு வந்த சூர்யா, விரைவில் பாண்டிராஜ் இயக்க உள்ள படத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.