surya 36th movie first look poster released
டிஎஸ்கே
சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம்.இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.இந்நிலையில் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இது சூர்யாவின் 36 வது படமாகும்.இப்படத்தில் சாய் பல்லவி ரகுல் பிரித் சிங் என இரண்டு ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர்.
என்.ஜி.கே
இந்நிலையில் இப்படத்தின் பெயர் மற்றும் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.என்.ஜி.கே என்ற படத்தலைப்புடன் கூடிய ஃபஸ்ட் லுக் போஸ்டரை தமது டிவிட்டர் பக்கத்தில் சூர்யா வெளியிட்டு இப்படத்திற்கு உங்களுடைய ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
பிறந்தநாள்
இயக்குனர் செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு பட பெயரும் ஃபஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் பட தலைப்புக்கான விளக்கமும் அதற்கான விரிவாக்கமும் என்ன என்பது தெரிய வந்துள்ளது.
ஷேர்
படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் தான் ஜிகே என்பதும் அதற்கான விரிவாக்கம் நந்த கோபாலன் குமாரன் என்பதும் தெரிய வந்துள்ளது.இந்த ஃபஸ்ட் லுக் போஸ்டரை சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.
