cook with comali : சமீபத்தில் பிரபல தொகுப்பாளினியின் பதிவுக்கு கமெண்ட் செய்திருந்த நெட்டிசன் ஒருவர், ஒரே ஒரு பிட்டு படம் மட்டும் நடி, நீ வேறலெவல்ல போயிருவ என கொச்சையாக பதிவிட்டிருந்தார்.
மதுரையை சேர்ந்தவர் விஜே பார்வதி. தொகுப்பாளராக கலக்கி வரும் இவர், சமீபத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ எனும் மாபெரும் ரியாலிட்டி கேம் ஷோவில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பேமஸ் ஆனார்.
இந்நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா, நந்தா, பெசன்ட் ரவி, நாரயணன் ஆகியோருடன் இணைந்து வேடர்கள் அணியில் ஒரு போட்டியாளராக இருந்து வந்த பார்வதி 20 நாட்களிலேயே எலிமினேட் செய்யப்பட்டு மூன்றாம் உலகம் சென்றார்.
பின்னர் அங்கு நடந்த போட்டியில் தோல்வியுற்றதால் சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து நிரந்தரமாக வெளியேறினார். இந்நிகழ்ச்சியில், இருந்து குறுகிய நாட்களிலேயே வெளியேறினாலும், கண்டெண்ட் கொடுப்பதில் கில்லாடியாக இருந்து வந்தார் பார்வதி.
இதுதவிர விஜய் டிவி-யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கோமாளியாக கலந்துகொண்டு கவனம் பெற்றார் பார்வதி. இதன்மூலம் அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர் வட்டமும் பெரிதானது.

விஜே பார்வதி அடிக்கடி சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுக்கு ஆளாவதும் உண்டு. சில சமயம் அதனை ஜாலியாக எடுத்துக்கொள்ளும் அவர், மோசமாக விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுப்படதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், சமீபத்தில் விஜே பார்வதியின் பதிவுக்கு கமெண்ட் செய்திருந்த நெட்டிசன் ஒருவர், ஒரே ஒரு பிட்டு படம் மட்டும் நடி, நீ வேறலெவல்ல போயிருவ என கொச்சையாக பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த விஜே பார்வதி, மூடிட்டு கிளம்பு, எங்களுக்கு தெரியும் என்ன பண்ணனும்னு, வந்துட்டாங்க அட்வைஸ் பண்ண, முதலில் பெண்ணை மதிக்க கத்துக்கோ. நண்பர்களே இவன் ரொம்ப மோசமானவனா இருக்கான். இவன கொஞ்சம் கவனிச்சு விடுங்க என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... Suriya 41 :18 வருடங்களுக்கு பின் இணைகிறோம்... பாலா படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்டு நடிகர் சூர்யா நெகிழ்ச்சி
